4-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு நெருக்கடி தர மேலும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள்!

இந்தியாவுடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவுள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்தார்.
இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர் (கோப்புப்படம்)
இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர் (கோப்புப்படம்)


இந்தியாவுடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவுள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

லார்ட்ஸ் டெஸ்ட் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் வுட் 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவில்லை. பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து கிறிஸ் வோக்ஸும் மீண்டுள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் வோக்ஸ் விளையாடினார்.

விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் மீதமுள்ள டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடுவது சந்தேகம். எனவே, அவருக்குப் பதில் ஜானி பேர்ஸ்டோவ் கீப்பிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை குறித்து பயிற்சியாளர் தெரிவித்தது:

"வுட் நேற்று காலை பந்துவீசினார். அவர் அணியின் தேர்வுக்குத் தகுதியாக உள்ளார். வோக்ஸும் அணிக்கானத் தேர்வுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளார்.

விக்கெட் கீப்பிங் செய்யுமாறு அழைத்தால் ஜானி பேர்ஸ்டோவ் நிச்சயம் அதைச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே உரையாடியிருக்கிறோம். கீப்பிங் செய்வது அவருக்கு மகிழ்ச்சிதான்."

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் செப்டம்பர் 2-ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com