நியூசிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து 10 விக்கெட்டுகள் எடுத்த அஜாஸ் படேல் நீக்கம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து 10 விக்கெட்டுகள் எடுத்த அஜாஸ் படேல் நீக்கம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்த அஜாஸ் படேல் நியூசி. அணியில் இடம்பெறவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. மும்பை டெஸ்டில் நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றார்.

வங்கதேச அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. ஜனவரி 1 அன்று முதல் டெஸ்டும் ஜனவரி 9 அன்று 2-வது டெஸ்டும் தொடங்குகின்றன. 

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் அஜாஸ் படேல் இடம்பெறவில்லை. 13 பேர் கொண்ட அணியில் ரச்சின் ரவிந்திரா மட்டும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக கேன் வில்லியம்சன் ஓய்வில் இருப்பதால் டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு மட்டும் இடமளிக்க முடியும் என்பதால் அஜாஸ் படேல் இடம்பெறவில்லை என அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com