ஜனவரி மாத சிறந்த வீரர்: ஐசிசி பரிந்துரைப் பட்டியலில் ரிஷப் பந்த்

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். 
ஜனவரி மாத சிறந்த வீரர்: ஐசிசி பரிந்துரைப் பட்டியலில் ரிஷப் பந்த்

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். 

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.

சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளைஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் இணையம் வழியாக வாக்குகளைச் செலுத்தலாம்.

முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமி ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரைக் குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. வெற்றியாளா்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளனா்.

மாதத்தின் சிறந்த வீரா் விருது முதல் முறையாக வழங்கப்படவுள்ள நிலையில், அந்த விருதுக்காக இந்திய வீரா்களான ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், நடராஜன் ஆகியோரின் பெயா்கள் பரிசீலனையில் இருந்தன. இவர்கள் தவிர இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவன் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குா்பாஸ், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் உள்பட சில வீரர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. 

இந்நிலையில் முழுப் பட்டியலில் இருந்து தற்போது மூன்று பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். ரிஷப் பந்த், ஜோ ரூட், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் ஆடவர் பிரிவிலும் பாகிஸ்தானின் டயனா பைக், தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், தென் ஆப்பிரிக்காவின் காப் ஆகியோர் மகளிர் பிரிவிலும் பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. வெற்றியாளர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com