2016 முதல் விராட் கோலியை வீழ்த்த முடியாமல் திணறும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

விராட் கோலியால் 2014 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தை மறக்க முடியாது.
2016 முதல் விராட் கோலியை வீழ்த்த முடியாமல் திணறும் ஜேம்ஸ் ஆண்டர்சன்
Updated on
1 min read

விராட் கோலியால் 2014 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தை மறக்க முடியாது.

5 டெஸ்டுகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. 

இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி மிக மோசமாக விளையாடினார். 5 டெஸ்டுகளில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்கள். இரு முறை டக் அவுட் ஆனார்.

இது அவருக்கு நல்ல பாடமாக அமைந்தது. அந்தத் தொடரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் 4 முறை ஆட்டமிழந்தார் கோலி. 50 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் மட்டும் எடுத்தார். சராசரி்: 4.75

இதற்குப் பிறகு ஆண்டர்சனை வேறுவிதமாக எதிர்கொள்ள ஆரம்பித்தார் கோலி. 

2016 முதல் ஆண்டர்சனின் 382 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒருமுறை கூட அவர் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை. இதில் 183 ரன்கள் எடுத்துள்ளார். 

2016-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்டுகளில் விளையாடி 0-4 எனத் தோற்றது. இதில் ஒருமுறை கூட ஆண்டர்சனிடம் விக்கெட்டைப் பறிகொடுக்கவில்லை கோலி. 2018-ல் இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணி 1-4 எனத் தோற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 5 டெஸ்டுகளில் 593 ரன்கள் குவித்தார் கோலி. 2 சதங்கள், 3 அரை சதங்கள். இந்தத் தொடரிலும் ஆண்டர்சனின் 270 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்கள் எடுத்தார். ஒருமுறை கூட ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை. 

இதனால், கடந்த இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணிக்கு மட்டுமல்லாமல் ஆண்டர்சனுக்குப் பெரும் சவாலாக உள்ளார் விராட் கோலி.

இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற கோலியை குறைந்த ரன்களில் வீழ்த்த வேண்டும். அதற்கு ஆண்டர்சன் உதவ வேண்டும். ஆனால் 2016 முதல் ஆண்டர்சனைத் தோற்கடித்து வருகிறார் கோலி. இந்த முறையும் கோலிக்கு வெற்றி கிடைக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com