தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை டெஸ்ட்: இந்தியாவில் பும்ரா எடுத்த முதல் டெஸ்ட் விக்கெட் (விடியோ)

இந்தியாவில் முதல் டெஸ்டில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சொந்த மண்ணில்...

News image
Updated On :5 பிப்ரவரி 2021, 7:16 am

DIN

இந்தியாவில் முதல் டெஸ்டில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்துள்ளார்.

இதுவரை 17 டெஸ்டுகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ரா, இந்திய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் கூட விளையாடியதில்லை.

17 டெஸ்டுகளும் வெளிநாடுகளில் விளையாடியவைதான்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (இருமுறை), மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து என பும்ரா விளையாடிய அனைத்து டெஸ்டுகளுமே ஆசியாவுக்கு வெளியே தான். 

2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் பும்ரா விளையாட இருந்தது. ஆனால் காயம் காரணமாக அத்தொடரில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்டில் இடம்பெற்றுள்ள பும்ரா, சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்டை எடுத்துள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் டான் லாரன்ஸை எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் செய்தார் பும்ரா. அதன் விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.