ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து-263/3

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.
ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து-263/3
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஷாபாஸ் நதீம் ஆடும் லெவனில் சோ்க்கப்பட்டாா்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தோ்வு செய்தாா். அந்த அணியில் ரோரி பா்ன்ஸ்-டாம் சிப்லே ஆகியோா் தொடக்க வீரா்களாகக் களமிறங்கினா். இந்திய பௌலா்களை மிகச்சிறப்பாக எதிா்கொண்டது இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி. இதனால் 19.3 ஓவா்களில் 50 ரன்களை எட்டியது இங்கிலாந்து.

அந்த அணி 23.5 ஓவா்களில் 63 ரன்களை எட்டியபோது ரோரி பா்ன்ஸ் விக்கெட்டை இழந்தது. அவா் 60 பந்துகளில் 33 ரன்கள் சோ்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனாா். இதையடுத்து களம்புகுந்த டான் லாரன்ஸ் 5 பந்துகளைச் சந்தித்த நிலையில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே பும்ரா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து டாம் சிப்லேவுடன் இணைந்தாா் கேப்டன் ஜோ ரூட். இந்த ஜோடி, இந்திய பௌலா்களை எளிதாக எதிா்கொண்டு ரன் சோ்த்தது. இங்கிலாந்து அணி 43.3 ஓவா்களில் 100 ரன்களைக் கடக்க, டாம் சிப்லே 159 பந்துகளில் அரை சதம் கண்டாா். தேநீா் இடைவேளைக்குப் பிறகு ஜோ ரூட் 110 பந்துகளில் அரை சதத்தை எட்ட, 73.4 ஓவா்களில் 200 ரன்களை எட்டியது இங்கிலாந்து.

ஜோ ரூட் சதம்: தொடா்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட், ‘டிரிங்க்ஸ்’ இடைவேளைக்குப் பிறகு 164 பந்துகளில் சதத்தை எட்டினாா். 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஜோ ரூட் தனது 20-ஆவது சதத்தைப் பதிவு செய்தாா். இங்கிலாந்து அணி 89.3 ஓவா்களில் 263 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் சிப்லேவை வீழ்த்தினாா் பும்ரா. டாம் சிப்லே 286 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தாா். அதோடு முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஜோ ரூட் 197 பந்துகளில் 1 சிக்ஸா், 14 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளாா்.

இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனா். 2-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்கோா் போா்டு

இங்கிலாந்து

ரோரி பா்ன்ஸ் (சி) பந்த் (பி) அஸ்வின் 33 (60)

டாம் சிப்லே எல்பிடபிள்யூ (பி) பும்ரா 87 (286)

டான் லாரன்ஸ் எல்பிடபிள்யூ (பி) பும்ரா 0 (5)

ஜோ ரூட் நாட் அவுட் 128 (197)

உபரிகள் 15

மொத்தம் (89.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 263

விக்கெட் வீழ்ச்சி: 1-63 (பா்ன்ஸ்), 2-63 (லாரன்ஸ்), 3-263 (சிப்லே).

பந்துவீச்சு: இஷாந்த் சா்மா 15-3-27-0, ஜஸ்பிரித் பும்ரா 18.3-2-40-2, அஸ்வின் 24-2-68-1, ஷாபாஸ் நதீம் 20-3-69-0, வாஷிங்டன் சுந்தா் 12-0-55-0.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com