கோப்புப்படம்
கோப்புப்படம்

300 டெஸ்ட் விக்கெட்டுகள்: கபில் தேவ், ஜாகீர் கான் வரிசையில் இஷாந்த்!

​டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது லாரன்ஸ் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார்.

32 வயதான இஷாந்த் சர்மா 98-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 3-வது வேகப்பந்துவீச்சாளர், ஒட்டுமொத்தமாக 6-வது வீரர்.

இந்த சாதனைக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுட்டுரைப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளன.

2007-இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் இஷாந்த் சர்மா. 19 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிக்கி பாண்டிங்கைத் திணறடித்தது இன்றளவும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

வீரர்மொத்த விக்கெட்டுகள்300-வது விக்கெட்டை வீழ்த்திய ஆட்டம்
1.அனில் கும்ப்ளே61966-வது ஆட்டம்
2.கபில் தேவ்43483-வது ஆட்டம்
3.ரவிச்சந்திரன் அஸ்வின்*37754-வது ஆட்டம்
4.ஹர்பஜன் சிங்41772-வது ஆட்டம்
5.ஜாகீர் கான்31189-வது ஆட்டம்
6.இஷாந்த் சர்மா*30098-வது ஆட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com