தோல்வி பயத்தில் இந்தியா: ஒரு மணி நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து அணி!

நன்கு விளையாடி வந்த ஷுப்மன் கில், 50 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
தோல்வி பயத்தில் இந்தியா: ஒரு மணி நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை வெல்லும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி. 5-ம் நாளில் முதல் ஒரு மணி நேரத்தில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா,  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. ரோஹித் 12 ரன்களுக்கு வெளியேறியிருந்தாா். கில் 15, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

5-ம் நாளான இன்று இந்திய அணி மிகவும் நம்பியிருந்த புஜாராவை 15 ரன்களில் வீழ்த்தினார் ஜேக் லீச். நன்கு விளையாடி வந்த ஷுப்மன் கில், 50 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதே ஓவரில் ரஹானேவையும் டக் அவுட் செய்து அசத்தினார் ஆண்டர்சன்.

இதனால் இந்திய அணி 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களுடன் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. இன்னும் 73 ஓவர்கள் மீதமுள்ளதால் இங்கிலாந்து அணி வெற்றி முனைப்பில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com