அதிக சர்வதேச ரன்கள்: பிரையன் லாராவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடத்தைப் பிடித்த விராட் கோலி

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பிரையன் லாராவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடம் பிடித்துள்ளார்.
அதிக சர்வதேச ரன்கள்: பிரையன் லாராவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடத்தைப் பிடித்த விராட் கோலி

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பிரையன் லாராவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடம் பிடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

சென்னை டெஸ்டில் 11, 72 என 83 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. இதன்மூலம் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பிரையன் லாராவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடம் பிடித்துள்ளார்.

பிரையன் லாரா, 430 ஆட்டங்களில், 521 இன்னிங்ஸில் 22,358 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி, 424 ஆட்டங்களில் 470 இன்னிங்ஸில் 22,369 ரன்கள் எடுத்து பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார். 

லாரா 53 சதங்களும் 111 அரை சதங்களும் எடுத்த நிலையில் விராட் கோலி 70 சதங்களும் 109 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். 664 ஆட்டங்களில் 782 இன்னிங்ஸில் 34,357 ரன்கள் எடுத்துள்ளார். 100 சதங்கள், 164 அரை சதங்கள். 

அதிக சர்வதேச ரன்கள்

சச்சின் - 34,357 ரன்கள்
சங்கக்காரா - 28,016 ரன்கள்
பாண்டிங் - 27,483 ரன்கள்
ஜெயவர்தனே - 25,957 ரன்கள்
காலிஸ் - 25,534 ரன்கள்
டிராவிட் - 24,208 ரன்கள்
கோலி - 22,369 ரன்கள்
லாரா - 22,358 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com