
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 13 வருடங்களில் இருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் ஆறாம் இடத்தைப் பிடித்தது. 2008, 2014 ஆகிய வருடங்களில் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் அதன் பெயரை மாற்ற அணி உரிமையாளர்களான நெஸ் வாடியா, நடிகை ப்ரீத்தி ஜிந்தா, கர்ண் பால், மோஹித் பர்மன் ஆகியோர் முடிவு செய்தார்கள்.
அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் இலச்சினை வடிவத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2018-ல் தில்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் தில்லி கேபிடல்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி பெயர் மாற்றம் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.