விஜய் ஹசாரே தொடர்: விதர்பாவை வீழ்த்தியது தமிழகம்

விஜய் ஹசாரே தொடரில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


விஜய் ஹசாரே தொடரில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

விஜய் ஹசாரே தொடரில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டங்களின் ஒன்றில் தமிழகம், விதர்பா அணிகள் மோதின.

டாஸ் வென்ற தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த விதர்பா அணியால் தமிழக பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

41 ஓவர்களில் அந்த அணி 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அக்ஷய் வாத்கர் 31 ரன்கள் எடுத்தார்.

தமிழக அணி சார்பில் ஜெ கௌசிக், எம் முகமது மற்றும் பாபா அபராஜித் தலா 3 விக்கெட்டுகளையும், ரகுபதி சிலம்பரசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

151 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் நாராயண் ஜெகதீசன் களமிறங்கினர். 

தமிழக அணி தொடக்கம் முதல் கடைசி வரை அதிரடி ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியது. 

கார்த்திக் 2 சிக்ஸர்கள் அடித்து 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, அதிரடி காட்டிய ஜெகதீசன் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 18 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அசத்தினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெகதீசன் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு வீரர்கள் வந்ததும் போனதுமாக இருக்க, எம் முகமது 14 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 37 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தமிழக அணி 11.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com