இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல். ராகுல் விலகல்

இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றிருந்த கே.எல். ராகுல், காயம் காரணமாக...
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல். ராகுல் விலகல்
Updated on
1 min read

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றிருந்த கே.எல். ராகுல், காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மெல்போர்னில் கடந்த சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டபோது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராகுலால் டெஸ்ட் தொடரில் இடம்பெற முடியாது என பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. காயமடைந்துள்ள ராகுல், பெங்களூருக்குத் திரும்பி அங்குள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் காயத்துக்குச் சிகிச்சை பெறவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com