சிட்னி டெஸ்ட்: ரசிகர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

சிட்னி மைதானத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிட்னி டெஸ்ட்: ரசிகர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்டை நேரில் காண சிட்னி மைதானத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 27-ஆம் தேதி அந்த மைதானத்தில் "ஜோன் 5' பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2-ஆவது டெஸ்டின்போது மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 30,000 ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பிராட் ஹஸ்ஸார்ட் கூறியதாவது: சிட்னி மைதானத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும்போது முகக்கவசத்தைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் மட்டும் முகக்கவசத்தை அணியத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com