ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அசைக்க முடியாத விஹாரி - அஸ்வின் கூட்டணி: சிட்னி டெஸ்டின் புள்ளிவிவரங்கள்

ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் 10 இன்னிங்ஸ் விளையாடி 512 ரன்கள் எடுத்துள்ளார்.

News image
ரிஷப் பந்த் - புஜாரா
Updated On :11 ஜனவரி 2021, 10:44 am

DIN

இந்திய அணியின் கடுமையான முயற்சியால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. 5-வது நாளில் ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்துள்ளார்கள்.

சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது.

விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின்  128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். கடைசி வரை விஹாரி, அஸ்வினின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடியாமல் போனது. இருவரும் 259 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்கள். 

டிராவில் முடிவடைந்த சிட்னி டெஸ்டின் முக்கியமான புள்ளிவிவரங்கள்:

* 1979 லண்டனில் இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 150.5 ஓவர்கள் விளையாடி 429/8 ரன்கள் எடுத்து டிரா செய்தது. அதே வருடம் தில்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் 131 ஓவர்கள் விளையாடி 364/6 ரன்கள் எடுத்து டிரா செய்தது. அதன்பிறகு இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் இப்போதுதான் அதிக ஓவர்கள் விளையாடியுள்ளது. 1980 முதல் இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு அதிகமாக 4 முறை மட்டுமே விளையாடியுள்ளது. அதிலும் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக சிட்னியில் 4-வது இன்னிங்ஸில் 110 ஓவர்களுக்கு அதிகமாக விளையாடியுள்ளது. 

* 1971-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இரு அணிகள் மட்டுமே 4-வது இன்னிங்ஸில் 130 ஓவர்களுக்கும் அதிகமாக விளையாடி டிரா செய்துள்ளன. இன்றைய சிட்னி டெஸ்டுக்கு முன்பு 2012-ல் தென் ஆப்பிரிக்க அணி 148 ஓவர்கள் விளையாடி டிரா செய்தது. அடுத்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

* 6-வது விக்கெட்டுக்கு விஹாரியும் அஸ்வினும் 256 பந்துகள் விளையாடியுள்ளார்கள். 4-வது இன்னிங்ஸில் வெற்றி அல்லது டிரா கிடைத்த ஆட்டங்களில் 6-வது விக்கெட்டுக்கு இதைவிட மூன்று முறை தான் அதிகப் பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளார்கள். அதிகபட்சமாக 1999-ல் கில்கிறிஸ்டும் ஜஸ்டின் லாங்கரும் பாகிஸ்தானுக்கு எதிராக 353 பந்துகள் விளையாடினார்கள். 

* 4-வது இன்னிங்ஸில் 6-வது விக்கெட்டுக்கு விஹாரியும் அஸ்வினும் 256 பந்துகளை விளையாடியதை விடவும் இருமுறை இரு இந்திய ஜோடிகள் அதிகப் பந்துகளை எதிர்கொண்டுள்ளார்கள். 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக ராகுலும் ரிஷப் பந்தும் 267 பந்துகளையும் 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினும் நயன் மோங்கியாவும் 266 பந்துகளையும் எதிர்கொண்டார்கள். ஆனால் இவ்விரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

* 4-வது இன்னிங்ஸில் 4-வது விக்கெட்டுக்கு புஜாராவும் ரிஷப் பந்தும் 148 ரன்கள் எடுத்து இந்திய அளவில் சாதனை செய்துள்ளார்கள். 72 வருடங்களுக்கு முன்பு 4-வது இன்னிங்ஸில் 4-வது விக்கெட்டுக்கு விஜய் ஹசாரேவும் ருசி மோடியும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 139 ரன்கள் எடுத்தார்கள்.

* ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் 10 இன்னிங்ஸ் விளையாடி 512 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 56.88. அந்த 10 இன்னிங்ஸிலும் ஒவ்வொரு முறையில் குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். 

* டெஸ்ட் கேப்டனாக ரஹானே இதுவரை தோல்வியே எதிர்கொண்டதில்லை. நான்கு டெஸ்டில் 3-ல் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் டிராவும் செய்துள்ளார். 

* 4-வது இன்னிங்ஸில் 128 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் அஸ்வின். 4-வது இன்னிங்ஸில் 7-ம் நிலை இந்திய வீரர் எதிர்கொண்ட அதிகப் பந்துகளில் அஸ்வினின் முயற்சிக்கு 5-ம் இடம். அதிகபட்சமாக 2007-ல் லார்ட்ஸ் மைதானத்தில் தோனி 159 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.