தி ஹன்ட்ரட்: கேன் வில்லியம்சன் விலகல்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். 
தி ஹன்ட்ரட்: கேன் வில்லியம்சன் விலகல்
Updated on
1 min read

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். 

ஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும். இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இவ்வகையான கிரிக்கெட் போட்டிக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு விதமான கருத்துகள் உருவாகியுள்ளன.

ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டியைக் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வருட தி ஹன்ட்ரட் போட்டி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. 

ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து சமீபத்தில் விலகினார்கள். இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். பிர்மிங்ஹம் பீனிக்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வில்லியம்சன், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com