ஆஷஸ் போட்டிக்காக டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயார்: ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் போட்டிக்காக டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயார்: ஸ்டீவ் ஸ்மித்

கடந்த மூன்று ஆஷஸ் போட்டிகளில் 14 ஆட்டங்களில் எட்டு சதங்கள் உள்பட 1969 ரன்கள் எடுத்தார் ஸ்மித்.
Published on

ஆஷஸ் போட்டிக்காக டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயார் எனப் பிரபல ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவது பற்றி ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் நிறைய நாள் இருக்கிறது. காயத்திலிருந்து மெதுவாக மீண்டு வருகிறேன். 

டி20 உலகக் கோப்பையில் பங்குபெற விருப்பமாக உள்ளேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் என் லட்சியம். ஆஷஸ் போட்டிக்குத் தயாராக வேண்டும். கடந்த ஆஷஸ் போட்டியில் விளையாடியதை விடவும் சிறப்பாக விளையாட வேண்டும். அந்தளவுக்குத் தாக்கத்தை நான் ஏற்படுத்த வேண்டும். அதற்காக டி20 உலகக் கோப்பையில் பங்குபெற வேண்டாம் என்றாலும் அதை நான் ஏற்பேன். எனினும் அந்தளவுக்குப் போகவேண்டியதில்லை என நினைக்கிறேன் என்றார்.

காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களில் இருந்து ஸ்மித் விலகியுள்ளார். மேலும், கடந்த மூன்று ஆஷஸ் போட்டிகளில் 14 ஆட்டங்களில் எட்டு சதங்கள் உள்பட 1969 ரன்கள் எடுத்தார் ஸ்மித். 2021 ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 8 அன்று தொடங்கி ஜனவரி 18-ல் நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com