விம்பிள்டன்: சானியா - போபண்ணா இணை தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்...
விம்பிள்டன்: சானியா - போபண்ணா இணை தோல்வி
Updated on
1 min read

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா மிா்சா - ரோஹன் போபண்ணா இணை தோல்வியடைந்தது.

நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன், லண்டனில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா - போபண்ணா இணை, கிளாபாக் - ரோஜர் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 3-6, 6-3, 9-11 எனக் கடுமையாகப் போராடி தோற்றது இந்திய இணை. 

இந்த ஆட்டம் இரு நாள்களாக நடைபெற்றது. செவ்வாய் அன்று முதல் செட்டில் இந்திய இணை தோற்றது. அடுத்த நாள் சானியாவும் போபண்ணாவும் சிறப்பாக விளையாடினார்கள். 2-வது செட்டை வென்று, கடைசி செட்டில் கடுமையாகப் போராடியும் வெல்ல முடியாமல் போனது. 

இந்த ஆட்டத்தில் தோற்றதன்மூலம் இந்த வருட விம்பிள்டன் போட்டியில் பங்கேற்ற அனைத்து இந்தியர்களும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com