92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிஎன்பிஎல்: திருப்பூா் தமிழன்ஸ் 64/7மழையால் பாதிப்பு

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் திருப்பூா் தமிழன்ஸ் அணி 64/7 ரன்களையே எடுத்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2021, 8:58 pm

DIN

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் திருப்பூா் தமிழன்ஸ் அணி 64/7 ரன்களையே எடுத்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

நடப்புச் சாம்பியன் சேப்பாக் சூப்பா் கில்லீஸ்-திருப்பூா் தமிழன்ஸ் அணிகள் இடையிலானஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங்கை தோ்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த திருப்பூா் அணி 16.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அஷ்வின் கிறிஸ்ட் 23, கேப்டன் முகமது 10 ரன்களுடனும் அப்போது களத்தில் இருந்தனா்.

சதீஷ் அபாரம்: சேப்பாக் கில்லீஸ் பந்து வீச்சாளா் ராஜகோபால் சதீஷ் அற்புதமாக பந்துவீசி 5-10 விக்கெட்டுகளை சாய்த்தாா். மழை குறுக்கிட்டதால் இரண்டாவது ஆட்டமும் ரத்தானது.

ஏற்கெனவே முதல் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. புதன்கிழமை நெல்லை ராயல் கிங்ஸ்-ரூபி திருச்சி வாரியா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.