ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆஸி. வீரர் கம்மின்ஸ் விலகல்: தினேஷ் கார்த்திக் தகவல்

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆஸி. வீரர் கம்மின்ஸ் விலகியுள்ளதாக கேகேஆர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆஸி. வீரர் கம்மின்ஸ் விலகல்: தினேஷ் கார்த்திக் தகவல்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆஸி. வீரர் கம்மின்ஸ் விலகியுள்ளதாக கேகேஆர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் கேகேஆர் அணியில் விளையாடும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டனான கார்த்திக், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வர மாட்டேன் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இயன் மார்கன் வருவாரா என்றால் போட்டி நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. பல விஷயங்கள் மாறலாம். என்னை அணிக்குத் தலைமை தாங்கச் சொன்னால் அதற்கு தயாராக உள்ளேன் என்றார். 

ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துகொள்வது பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி, கடந்த மாத இறுதியில் கூறியதாவது: அனைவரும் மீண்டும் ஒன்று கூடிய பிறகு ஐபிஎல் போட்டியில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வது பற்றி விவாதிக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com