
இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா தேர்வாகியுள்ளார்.
இலங்கை அணியின் டி20 கேப்டனாக தசுன் ஷனகா கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு இலங்கை டி20 அணியின் கேப்டனாக மலிங்கா செயல்பட்டார். எனினும் சில மாதங்களாக அணியின் பயிற்சி முகாமில் மலிங்கா பங்கேற்கவில்லை. இதனால் ஷனகா புதிய கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக குசால் பெரேரா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 30 வயது குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்டுகள், 104 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். வங்கதேசத்தில் அந்நாட்டுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி.
இந்நிலையில் இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதற்கான இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா தேர்வாகியுள்ளார். இதையடுத்து இலங்கை ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக அவர் செயல்படவுள்ளார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜூன் 23 அன்றும் டி20 தொடர் ஜூன் 29 அன்றும் தொடங்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.