இந்திய அணி அபார பந்துவீச்சு: டெய்லரை வெளியேற்றினார் ஷமி

ஷமி பந்துவீச்சை அடித்து ஆட முயன்று 11 ரன்களில் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்...
இந்திய அணி அபார பந்துவீச்சு: டெய்லரை வெளியேற்றினார் ஷமி

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியினர் நன்கு பந்துவீசி வருகிறார்கள்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 4-ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை ஆட்டமும் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ஆட்டமும் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மழை காரணமாக தொடா்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இறுதி ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது. அவ்வாறு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

இந்த டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்துள்ளது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 49 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 

5-ம் நாளான இன்று திட்டமிட்டபடி ஆட்டம் தொடங்கும், வானிலை அறிக்கையின்படி முழு நாள் ஆட்டமும் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் மழை பெய்ததால் குறித்த நேரத்தில் ஆட்டம் தொடங்கவில்லை. எனினும் சிறிது நேரத்தில் மழை நின்றதால் 5-ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

இன்றும் இந்திய அணியினர் மிகவும் சிறப்பாகப் பந்துவீசி நியூசிலாந்து அணி ரன்கள் எடுப்பதைக் கட்டுப்படுத்தினார்கள். பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகிய மூவரும் சிறிதும் மனம் தளராமல் துல்லியமாகப் பந்துவீசினார்கள். இதனால் நியூசி. கேப்டன் வில்லியம்சனும் டெய்லரும் ரன்கள் எடுக்கத் திணறினார்கள். முதல் ஒரு மணி நேரத்தில் நியூசிலாந்து அணியினரால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் நிலை தடுமாறிய டெய்லர், ஷமி பந்துவீச்சை அடித்து ஆட முயன்று 11 ரன்களில் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நியூசிலாந்து அணி 64 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 15 ரன்கள் மற்றும் நிகோல்ஸ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com