

ஆடவர் டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முன்னணி வீரராக உள்ளார் 39 வயது ரோஜர் ஃபெடரர். கடந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் ஃபெடரர் தோல்வியடைந்தார்.
காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஃபெடரர் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். கடந்த வருடம் இரு அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. இந்நிலையில் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஃபெடரர் பங்கேற்கிறார்.
13 மாதங்கள் கழித்து மீண்டும் டென்னிஸ் ஆட்டங்களில் விளையாடும் ஃபெடரர், கத்தார் ஓபன் போட்டியின் 2-வது சுற்றில் டேன் இவான்ஸை எதிர்கொள்கிறார்.
இப்போது வலியும் இல்லாமல் காயமும் இல்லாமல் இருக்கிறேன். மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜூன் மாதம் நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பேன் என்று ஃபெடரர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.