புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணியில் கிருனாள் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா அறிமுகம்!

கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராகவும் 5-ம் நிலை பேட்ஸ்மேனாகவும் விளையாடுவார் என

News image
Updated On :23 மார்ச் 2021, 7:47 am

DIN


இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஒருநாள் அணியில் கிருனாள் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுகம் ஆகியுள்ளார்கள். கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராகவும் 5-ம் நிலை பேட்ஸ்மேனாகவும் விளையாடுவார் என கோலி அறிவித்துள்ளார். மேலும் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் களமிறங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.