மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய சீருடை

ஏப்ரல் 9 அன்று, ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய சீருடை

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சீருடையுடன் பங்கேற்கவுள்ளது.

ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் ஒரு கோப்பையையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் 2013-ல் மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. அதில் ஆரம்பித்து இதுவரை 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுவிட்டது. 

இந்நிலையில் இந்த வருடப் போட்டியில் புதிய சீருடையுடன் களமிறங்கவுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஷாந்தனு, நிகில் ஆகிய இருவரின் வடிவமைப்பில் புதிய சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 9 அன்று, ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com