டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் & புதிய படங்கள்: வலியுறுத்தும் அஜய் தேவ்கன், தமன்னா!

எந்தவிதமான தடையும் இல்லாத கிரிக்கெட்டெயின்மென்ட் என்கிற பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவோம்.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் & புதிய படங்கள்: வலியுறுத்தும் அஜய் தேவ்கன், தமன்னா!
Published on
Updated on
1 min read

இந்தியா, ஐபிஎல் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, ‘என்டர்டெயின்மென்ட் கா ஆல்-ரவுண்டர்’ என்கிற புதிய பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிடிபி முத்ரா குழுமத்தின் கருத்தாக்கத்தில் பிரபலங்களான அஜய் தேவ்கன், தமன்னா நடிப்பில் இரு விளம்பரப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை மட்டுமில்லாமல்  டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஓடிடி தளத்தில் வெளிவரும் புதிய படங்களையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என இரு பிரபலங்களும் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள். விளம்பரங்களில் சுதர்சனாக அஜய் தேவ்கனும் மாணிக்கமாக தமன்னாவும் நடித்துள்ளார்கள். 

டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிர்வாக துணைத் தலைவரும், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான சித்தார்த் ஷக்தர், இந்த விளம்பரம் பற்றி கூறியதாவது:

இந்தியாவில் இணையத்தில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க டிஸ்னி + ஹாட்ஸ்டார் சிறந்த தளமாக உள்ளது. இந்த வருடம், எங்களிடம் விவோ ஐபிஎல் 2021 போட்டியைக் காண ரசிகர்கள் எங்களிடம் வரும்போது நாங்கள் அவர்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லாத கிரிக்கெட்டெயின்மென்ட் என்கிற பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவோம். நாங்கள் மட்டுமே விவோ ஐபிஎல் 2021 போட்டியையும் நேரலை விளையாட்டுப் போட்டிகளையும் புதிய படங்களையும் அசல் நிகழ்ச்சிகளையும் வழங்கும் ஒரே ஓடிடி தளமாகும். எனவே தான் இதுவரை பார்த்திராத வேடங்களில் அஜய் தேவ்கன், தமன்னா நடித்த ‘என்டர்டெயின்மென்ட் கா ஆல்-ரவுண்டர்’ என்கிற இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்கிறோம் என்றார். 

ஏப்ரல் 9 அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியின் அனைத்து நேரலை ஆட்டங்களும் புதிய மற்றும் பழைய டிஸ்னி + ஹாட்ஸ்டார்  (ரூ. 399 /12 மாதங்களுக்கு), டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியம்  (ரூ. 1499 /12 மாதங்களுக்கு) சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், மராத்தி என 8 மொழிகளில் கிரிக்கெட் வர்ணனை இடம்பெறும்.  

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி-யில் தி பிக் புல், புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா போன்ற பல புதிய படங்கள் வெளியாகவுள்ளன. தி ஃபால்கான் அண்ட் தி வின்டர் சோல்ஜர் போன்ற சர்வதேசப் படங்களும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளன. ஸ்பெஷல் ஓபிஎஸ், ஆர்யா பருவம் 2 போன்ற ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளன. எனவே வருடம் முழுக்கப் பொழுதுபோக்குகளுக்குக் குறைவு இருக்காது. இந்த விளம்பரப் படங்கள் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com