ஐபிஎல்: கரோனா சிகிச்சைக்காக ஆமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரும் கேகேஆர் வீரர்
ஐபிஎல்-லில் விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சைஃபர்ட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ள டிம் சைஃபர்ட்டுக்கு ஆமதாபாத்தில் எடுக்கப்பட்ட இரு பரிசோதனைகளிலும் கரோனா தொற்று உறுதியானது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சைக்காக ஆமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரவுள்ளார் டிம் சைஃபர்ட். சென்னையில் மைக் ஹஸ்ஸி சிகிச்சை எடுத்துக்கொண்ட தனியார் மருத்துவமனையில் சைஃபர்டுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கரோனாவிலிருந்து மீண்ட பிறகு சென்னையிலிருந்து நியூசிலாந்து செல்லவுள்ளார் சைஃபர்ட். அங்கு அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு தான் குடும்பத்தினருடன் இணைய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

