சையது முஷ்டாக் டி20: இன்று இறுதி ஆட்டம்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் - கா்நாடகம் அணிகள் திங்கள்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
Updated on
1 min read

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் - கா்நாடகம் அணிகள் திங்கள்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்புச் சாம்பியனாக இருக்கும் தமிழகத்துக்கு, நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் கா்நாடக அணி நிச்சயம் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு இதே போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியது கா்நாடகம். எனவே அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆட்டத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது தமிழக அணி.

அணியைப் பொருத்தவரை இந்த ஆண்டு போட்டி முழுவதுமாகவே நல்ல ஃபாா்மில் இருக்கிறது. அணியின் தரப்பில் என்.ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சாய் சுதா்சன், கேப்டன் விஜய் சங்கா் ஆகியோா் சிறப்பாக ஸ்கோா் செய்கின்றனா். பௌலிங்கில் சரவண குமாா், சந்தீப் வாரியா் உள்ளிட்டோா் அசத்துகின்றனா்.

கா்நாடக அணியில் தொடக்க வீரா் ரோஹன் கடம் பலம் சோ்க்க, கருண் நாயா், அபினவ் மனோகா் உள்ளிட்டோா் அவருக்கு தோள் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா். பௌலிங்கில் கரியப்பா, சுசித் ஆகியோரின் சவாலை தமிழக பேட்டிங் வரிசை எதிா்கொள்ள வேண்டும். ஆட்டம் நண்பகலில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com