இந்திய ஏ அணிக்கு எதிராக இரு வீரர்கள் சதம்: முதல் நாளில் தென்னாப்பிரிக்கா ஏ 343/3

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.
இந்திய ஏ அணிக்கு எதிராக இரு வீரர்கள் சதம்:  முதல் நாளில் தென்னாப்பிரிக்கா ஏ 343/3
Published on
Updated on
1 min read

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தெ.ஆ.-வின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணியில் டெஸ்ட் வீரர் விஹாரி, தமிழக வீரர் பாபா அபரஜித் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் நாளன்று தெ.ஆ. ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. கேப்டன் பீட்டர் மலான் 157 ரன்களுடனும் ஜேசன் ஸ்மித் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். நடுவரிசை வீரர் டோனி 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com