இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இத்தொடரின் ஆரம்பம் முதல் இந்திய அணியினருடன் பயணித்து வருகிறார். அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.