டெஸ்ட் தொடர்: மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஜார்வோ கைது

ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த ஜார்வோவை...
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் (கோப்புப் படம்)
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த ஜார்வோவை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

யூடியூப் தளத்தில் 1.27 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்டவர் ஜார்வோ. நேற்று, லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ஜார்வோ, இங்கிலாந்து இன்னிங்ஸின்போது திடீரென மைதானத்துக்குள் ஓடிவந்தார். கையில் பந்துடன் வந்த ஜார்வோ, இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீது மோதினார். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனே பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் வந்து ஜார்வை அழைத்துச் சென்றார்கள். இதையடுத்து ஜார்வோவை மெட்ரோபாலிடன் காவலர்கள் கைது செய்துள்ளார்கள்.

இதற்கு முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் நடைபெற்றபோதும் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார் ஜார்வோ. லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன் போல உடையணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார். இதன் விடியோவையும் Jarvo69 aka BMWJarvo என்கிற தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.  இதையடுத்து லீட்ஸ் மைதானத்தில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com