டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள ஷர்துல் தாக்குர்

ஓவல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள ஷர்துல் தாக்குர்
Published on
Updated on
1 min read

ஓவல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5-வது டெஸ்ட், செப்டம்பர் 10 அன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது.

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஓவல் டெஸ்டில் 57, 60 என இரு அரை சதங்கள் அடித்த இந்தியாவின் ஷர்துல் தாக்குர், பேட்ஸ்மேன் தரவரிசையில் 79-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 59 இடங்கள் முன்னேறியுள்ளார். அதேபோல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 49-வது இடத்துக்கு ஷர்துல் தாக்குர் முன்னேறியுள்ளார். 

ஓவல் டெஸ்டில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com