
யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் பிரபல வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷியாவின் மெட்விடேவ் பட்டம் வென்றார்.
நியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், ரஷியாவின் டேனியல் மெட்விடேவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெட்விடேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று பட்டங்களை ஜோகோவிச் வென்ற நிலையில் யு.எஸ். ஓபனில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.