
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
ரசிகர்களின்றி இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 14வது சீசன் கரோனா காரணமாக கடந்த மே மாதம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியின் நடப்புத் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து அணி வீரர்களும் துபையில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இன்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் முதல் போட்டிக்கான டிக்கெட் நாளை(செப்.16) முதல் இணையதளத்தில் விற்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.