கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி கெஞ்சிய பந்த்: பலன் கிடைத்ததா? (விடியோ)
By DIN | Published On : 04th August 2021 06:35 PM | Last Updated : 04th August 2021 06:35 PM | அ+அ அ- |

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஸாக் கிராலே விக்கெட்டை வீழ்த்த கேப்டன் விராட் கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி ரிஷப் பந்த் கெஞ்சிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து, ஸாக் கிராலே களமிறங்கினார். அவர் 27 ரன்கள் எடுத்திருந்தபோது 20-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் கிராலேவை வீழ்த்த எல்பிடபில்யூவுக்கு இந்திய அணி முறையிட்டது. நடுவர் அவுட் கொடுக்காததைத் தொடர்ந்து, இந்திய அணி ரிவியூ எடுத்தது.
ஆனால், நடுவரின் முடிவே சரியானது என ரிவியூவில் உறுதியானது. இதனால், இந்திய அணி ஒரு ரிவியூவை இழந்தது.
இதையும் படிக்க | உணவு இடைவேளையில் இங்கிலாந்து 61 ரன்கள்: 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அபாரம்!
அதே ஓவரின் கடைசி பந்தில் கீப்பர் கேட்ச்சுக்கு இந்திய அணி மீண்டும் முறையிட்டது. இந்த முறையும் நடுவர் அவுட் இல்லை என்றார்.
கேப்டன் கோலி ரிவியூ எடுப்பது குறித்து சிராஜ் மற்றும் அணி வீரர்களிடம் கேட்டார். உடனிருந்த கீப்பர் ரிஷப் பந்த் ரிவியூ எடுக்கச் சொல்லி கேட்டார். ஏற்கெனவே ஒரு ரிவியூவை இதே ஓவரில் இழந்ததால், மீண்டும் ரிவியூவை இழக்க வேண்டாம் என கோலி எண்ணியிருக்கக்கூடும்.
எனினும், பந்த் விடாப்பிடியாக ரிவியூ எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இதன்பிறகு, கோலி ரிவியூ எடுத்தார்.
Convincing level: RISHABH PANT!!
— Sony Sports (@SonySportsIndia) August 4, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! #ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Kohli pic.twitter.com/kgqXemxKhO
ரிவியூவில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. இதன்மூலம், கிராலே அவுட் என்பது உறுதியானது. இதன்பிறகே, கோலி நிம்மதியடைந்தார்.
கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி பந்த் கட்டாயப்படுத்தும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.