லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் புதிய வீரர் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்...
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் புதிய வீரர் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமது, இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழன் முதல் தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளானதால் ஆல்ரவுண்டர் மொயீன் அலி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் புதிய பலம் சேர்ப்பார், ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாத குறையைத் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியில்  வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் மூத்த பந்துவீச்சாளர்களான ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமது தேர்வாகியுள்ளார். 24 வயது முகமது இதுவரை 7 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த டாம் பெஸ் அணியிலிருந்து விலகி, யார்க்‌ஷைர் அணிக்காக விளையாடச் சென்றுள்ளார். காயம் காரணமாக ஆண்டர்சன், பிராட் ஆகிய இருவராலும் லார்ட்ஸ் டெஸ்டில் விளையாட முடியாமல் போனால், முகமது இங்கிலாந்து அணியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com