மீண்டும் சொதப்பிய ரஹானே: தடுமாறும் இந்திய அணி நடுவரிசை!

020 முதல் டெஸ்ட் ஆட்டங்களில் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூவரும் சுமாராக விளையாடி வருகிறார்கள்.
மீண்டும் சொதப்பிய ரஹானே: தடுமாறும் இந்திய அணி நடுவரிசை!

லார்ட்ஸ் டெஸ்டிலாவது புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் நன்கு விளையாடி ரன்கள் சேர்ப்பார்கள் என்கிற ஆசை முதல் இன்னிங்ஸில் பொய்த்துப் போனது. என்னதான் ஆச்சு இந்திய அணியின் நடுவரிசைக்கு?

லார்ட்ஸ் டெஸ்டில் புஜாரா 9 ரன்களிலும் ரஹானே இன்று 1 ரன்னிலும் ஆட்டமிழந்துள்ளார்கள். இதுதவிர நீண்ட நாளாக விராட் கோலி சதமடிக்காமல் இருப்பதும் இந்திய அணியைப் பல்வேறு வகையில் பாதித்து வருகிறது. இதனால் ரிஷப் பந்த், ஜடேஜா போன்ற கீழ் நடுவரிசை வீரர்கள் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக ரிஷப் பந்த் நன்றாக விளையாடி வருவதால் இந்தக் குறை இந்திய அணியைப் பெரிதளவில் பாதிக்கவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற முடிந்தது.

2020 முதல் டெஸ்ட் ஆட்டங்களில் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூவரும் சுமாராக விளையாடி வருகிறார்கள். விராட் கோலி அவ்வப்போது நன்கு விளையாடினாலும் சதமடித்து நீண்ட நாளாகி விட்டது. 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்தார். அதன்பிறகு 16 இன்னிங்ஸில் இரு அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரஹானே, மெல்போர்னில் அட்டகாசமான சதமடித்தார். அந்தச் சதத்துக்குப் பிறகு விளையாடிய 15 இன்னிங்ஸில் ஓர் அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். புஜாரா இந்தியாவில் விளையாடிய இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கடந்த 10 இன்னிங்ஸில் ஓர் அரை சதம் கூட எடுக்கவில்லை. 

2020-க்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் நடுவரிசை

புஜாரா - 23 இன்னிங்ஸ், 552 ரன்கள், சராசரி - 25.09, 5 அரை சதங்கள்
கோலி - 16 இன்னிங்ஸ், 387 ரன்கள், சராசரி - 24.19, 3 அரை சதங்கள்
ரஹானே - 22 இன்னிங்ஸ், 541 ரன்கள், சராசரி - 25.76, 1 சதம் & 1 அரை சதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com