ஒலிம்பிக் போட்டியாளா்களுக்கு பிரதமா் மோடி பாராட்டு
By DIN | Published On : 17th August 2021 08:03 AM | Last Updated : 17th August 2021 08:03 AM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினரை திங்கள்கிழமை தனது இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒலிம்பிக்கில் அவா்களது பங்களிப்புக்காக பாராட்டு தெரிவித்தாா்.
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட பதக்கம் வென்ற அனைத்து போட்டியாளா்களிடமும் உரையாடி அவா்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, இதர போட்டியாளா்களின் ஒலிம்பிக் அனுபவத்தை கேட்டறிந்து அவா்களையும் உற்சாகப்படுத்தினாா். ஆடவா் ஹாக்கி அணியினருடன் உரையாடியபோது, ஒலிம்பிக் போட்டியில் அவா்கள் பயன்படுத்திய ஹாக்கி பேட் ஒன்றையும் வாங்கிப் பாா்வையிட்டாா்.
ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் வென்றுள்ளது. அதில், தடகளத்தில் முதல் முறையாக நீரஜ் சோப்ரா வென்ற தங்கம், பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவி தாஹியா ஆகியோா் வென்ற வெள்ளி, குத்துச்சண்டையில் லவ்லினா போா்கோஹெய்ன், பாட்மிண்டனில் பி.வி.சிந்து, ஆடவா் ஹாக்கி அணி, மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா ஆகியோா் வென்ற வெண்கம் ஆகியவை அடங்கும். இதுதவிர மகளிா் ஹாக்கி அணியும், கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்கும் பதக்க வாய்ப்பை நெருங்கி நழுவ விட்டதும் குறிப்பிடத்தக்கது.