லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: புள்ளிவிவரங்களும் சுவாரசியங்களும்

இதற்கு முன்பு ரூட் சதமடித்தபோது இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததில்லை.
லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: புள்ளிவிவரங்களும் சுவாரசியங்களும்

1986-ல் கபில் தலைமையிலும் 2014-ல் தோனி தலைமையிலும் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அங்குக் கிடைத்த 3-வது வெற்றி இது. வெளிநாடுகளில் மெல்போர்னில் இந்திய அணி அதிகபட்சமாக 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

19 விக்கெட்டுகள்

இந்த டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். (ஒரு விக்கெட் ரன் அவுட்டில் கிடைத்தது). 2018-ல் ஜொஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இதற்கு முன்பு டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

முட்டைகளும் அதிகபட்ச ரன்களும் 

முதல் இன்னிங்ஸில் பும்ராவும் ஷமியும் டக் அவுட் ஆனார்கள். 2-வது இன்னிங்ஸில் தங்களுடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களை (ஷமி - 59*, பும்ரா 29*) எடுத்துள்ளார்கள். 

1

இந்த டெஸ்டில் தனது 22-வது சதத்தை அடித்தார் கேப்டன் ரூட். இதற்கு முன்பு அவர் சதமடித்தபோது இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததில்லை. முதல்முறையாக சதமடித்தும் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் ரூட். (கிரீம் ஸ்மித் 27 சதங்கள் அடித்தும் தோல்வியை எதிர்கொள்ளவில்லை.)

89 ரன்கள்

2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷமியும் புவனேஸ்வர் குமாரும் 10-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார்கள். அதன்பிறகு 9-வது விக்கெட் மற்றும் 10-வது விக்கெட்டுக்கு இப்போதுதான் இந்திய அணி இந்தளவுக்கு அதிக ரன்களை எடுத்துள்ளது. 

5

ரூட்டின் விக்கெட்டை 5 முறை வீழ்த்தியுள்ளார் பும்ரா. பேட் கம்மின்ஸும் பும்ரா பந்துவீச்சில் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். டெஸ்டுகளில் பும்ராவின் 379 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் எடுத்து 5 முறை வீழ்ந்துள்ளார் ரூட்.  

0

லார்ட்ஸ் டெஸ்டில் 7 முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். டெஸ்டில் இங்கிலாந்து அணியினர் எடுத்த அதிகபட்ச டக் அவுட்களை இது சமன் செய்துள்ளது. கடைசியாக 1999-ல் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது. 

6 விக்கெட்டுகள்

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2001 கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி ஆஸி.யின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2016 சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணி கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வென்றது.

8/126

லார்ட்ஸில் இந்தியப் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு இது. சிராஜுக்குக் கிடைத்த பெருமை. இதற்கு முன்பு கபில் தேவ் 1982-ல் 168 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

120

சொந்த மண்ணில் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com