விளையாட்டு செய்தி துளிகள்

Updated on
1 min read

* ஜூனியா் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பத்தேரி (65 கிலோ), சஞ்சு தேவி (62 கிலோ) ஆகியோா் இறுதிச்சுற்றில் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றனா்.

* துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் (யூத்), ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இருபால் பிரிவுகளிலுமாக 73 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

* எஸ்ஏஎஃப்எஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வரும் அக்டோபா் 3-ஆம் தேதி வங்கதேசத்தை எதிா்கொள்கிறது.

* புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது சீசன் வரும் டிசம்பரில் தொடங்க இருக்கும் நிலையில், மொத்தம் 59 வீரா்கள் அவா்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனா்.

* டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்து திரும்பிய இந்திய மகளிா் ஹாக்கி அணியைச் சோ்ந்த வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு, மாநில தலைமை ஹாக்கி பயிற்சியாளா் பொறுப்பை மிஸோரம் அரசு வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com