பாராலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் பங்கேற்கமாட்டார்
By ANI | Published On : 24th August 2021 11:17 AM | Last Updated : 24th August 2021 11:17 AM | அ+அ அ- |

மாரியப்பன் தங்கவேலு(கோப்புப்படம்)
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்ட சர்வதேச பயணியின் தொடர்பில் மாரியப்பன் இருந்துள்ளார். மேலும், ஒலிம்பிக் கிராமத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் மாரியப்பனுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்று நடைபெறவுள்ள துவக்க விழாவில் பங்கேற்க வேண்டாம் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, துவக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தும் மாற்று வீரராக டேக் சந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.