விரைவில் ஓய்வு: சாஹித் அப்ரிடி அறிவிப்பு

2022 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக
விரைவில் ஓய்வு: சாஹித் அப்ரிடி அறிவிப்பு

2022 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சாஹித் அப்ரிடி கூறியுள்ளார். 

41 வயது அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்டுகள், 398 ஒருநாள், 99 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சாஹித் அப்ரிடி, சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தபோது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். 1996-ல் தன்னுடைய 2-வது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை ஏற்படுத்தினார். இதன்பிறகு இந்தச் சாதனையை கூரே ஆண்டர்சனும் (36 பந்துகள்) டி வில்லியர்ஸும் (31 பந்துகள்) முறியடித்தார்கள் .

அப்ரிடி கடைசியாக 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடி வந்தார். 50 பிஎஸ்எல் ஆட்டங்களில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடத்துடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2022 பிஎஸ்எல் போட்டி, ஜனவரி, பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இதுவரை மூன்று அணிகளில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். முல்தான் அணி எனக்கு அனுமதி தந்தால், குயிட்டா அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்தால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடுவேன் என அப்ரிடி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com