கதை முடிந்தது: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள டேவிட் வார்னர் இதுபற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
கதை முடிந்தது: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள டேவிட் வார்னர் இதுபற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

2021 ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் 195 ரன்கள் மட்டுமே எடுத்தார் டேவிட் வார்னர். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டி நடைபெற்றபோது கேப்டன் பதவியைப் பறிகொடுத்ததோடு அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். எனினும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி, தொடர் நாயகன் விருதை வென்றார். 

ஐபிஎல் அணியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்போதும் போல பயிற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டேன். ஒருநாள் கூட தவறவில்லை. வலைப்பயிற்சியின்போது நன்றாக விளையாடினேன். எப்போது வேண்டுமானாலும் நான் வழக்கம்போல நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கலாம். கேப்டன் பதவியைப் பறித்து அணியிலிருந்தும் நீக்கியதால் வேதனையடைந்தேன் என்று ஐபிஎல் 2021 அனுபவம் பற்றி வார்னர் கூறினார்.

ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து ஐபிஎல் 2022 போட்டியில் புதிய அணியில் விளையாடவுள்ளார் வார்னர். 

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் டேவிட் வார்னர் கூறியதாவது:

கதை முடிந்தது. இத்தனை வருடங்களாக ஆதரவளித்த சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com