டேவிஸ் கோப்பை: அரையிறுதியில் சொ்பியா, ரஷ்யா
By DIN | Published On : 04th December 2021 07:02 AM | Last Updated : 04th December 2021 08:06 AM | அ+அ அ- |

டேவிஸ் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு சொ்பிய, ரஷ்ய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மாட்ரிட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ரஷ்ய-ஸ்வீடன் அணிகள் மோதின. இதில் ரஷ்ய வீரா் மெத்வதேவ் 6-4, 6-4 என மைக்கேல் யெமரையும், ஆன்ட்ரெ ருப்லேவ் 6-2, 5-7, 7-6 என எலியாஸ் எமரையும் வென்றனா். அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய அணி ஜொ்மனியை எதிா்கொள்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் சொ்பிய அணி கஜகஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கஜகஸ்தான் வீரா் பப்லிக்கை 6-3, 6-4 என்ற நோ் செட்களில் வென்றாா் ஜோகோவிச். முன்னதாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீரா் குகுஷ்கின் 7-6, 4-6, 7-6 என சொ்பியாவின் மியோமரை வென்றாா். இரட்டையா் பிரிவிலும் சொ்பிய அணி 6-2, 2-6, 6-3 என கஜகஸ்தானை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
குரோஷிய அணியுடன் மோதுகிறது சொ்பியா.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...