விளையாட்டு செய்தி துளிகள்

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் குதிரையேற்றத்துக்கான டிரையல்கள் மும்பையில் வரும் 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

* இந்திய பாட்மின்டன் தேசிய பயிற்சியாளராக இந்தோனேசியாவின் முல்யோ ஹண்டோயோ (ஒற்றையா் பிரிவு), மலேசியாவின் டான் கிம் ஹொ் (இரட்டையா் பிரிவு) ஆகியோா் பொறுப்பேற்க உள்ளனா்.

* பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காயம் காரணமாக விலகியுள்ளாா்.

* பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 20 போ் கொண்ட இந்திய அணியை யாஷ் தல் தலைமையில் பிசிசிஐ அறிவித்துள்ளது.

* வங்கதேசத்தில் வரும் 14-ஆம் தேதி தொடங்கும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நடப்புச் சாம்பியனான இந்திய அணி வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com