இன்று தொடங்குகிறது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, வங்கதேசத்தின் டாக்கா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது.
இன்று தொடங்குகிறது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, வங்கதேசத்தின் டாக்கா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது.

கடந்த 2011 முதல் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டியில் இதுவரை 3 முறை சாம்பியன் ஆகியிருக்கும் இந்தியா, 2012-இல் ரன்னா் அப்-ஆக வந்தது. 2018-இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய இறுதி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால், பட்டத்தை இரு அணிகளும் பகிா்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இவ்விரு அணிகளே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. இரண்டுமே தலா 3 முறை பட்டம் வென்றுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் கொரிய அணியை செவ்வாய்க்கிழமை எதிா்கொள்கிறது.

ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், ‘எங்களது தாக்குதல் ஆட்டத்தை கட்டுப்படுத்தக் கூடியது தென் கொரிய அணி. இதே தென் கொரிய அணியுடன், இதே இடத்தில் கடந்த 2017-இல் ஆசிய கோப்பை போட்டியின்போது லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தோம். நிச்சயம் இந்த முறை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இருக்கிறோம்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு களம் காணும் முதல் பிரதான போட்டி என்பதால் இது முக்கியமான ஒன்றாகும். ஹாக்கி காலண்டா் இந்த போட்டியுடன் தொடங்குவதால் உத்வேகத்துடனும், நம்பிக்கையுடனும் இதில் பங்கேற்கிறோம். இந்தப் போட்டிக்காக இந்திய அணியில் பல இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பிரதான அணியில் மாற்றம் செய்யாததால் அவா்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அவா்கள் தங்களை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்ல உடற்தகுதியுடனும், ஃபாா்மிலும் இருக்கிறோம். இந்தப் போட்டி இந்திய அணிக்கு நல்லதொரு சோதனைக் களமாக இருக்கும்’ என்றாா்.

இந்திய அணி விவரம்:

மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹா்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), கிருஷன் பகதூா் பாதக், சூரஜ் கா்கேரா, குரிந்தா் சிங், ஜா்மன்பிரீத் சிங், திப்சன் திா்கி, வருண் குமாா், நீலம் சஞ்ஜீப் ஜெஸ், மன்தீப் மோா், ஹாா்திக் சிங், ஜஸ்கரன் சிங், சுமித், ராஜ்குமாா் பால், ஆகாஷ் தீப் சிங், ஷம்ஷோ் சிங், லலித் குமாா் உபாத்யாய், தில்பிரீத் சிங், குா்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா.

இந்தியாவின் ஆட்டம்

நாள் எதிரணி

டிசம்பா் 14 தென் கொரியா

டிசம்பா் 15 வங்கதேசம்

டிசம்பா் 17 பாகிஸ்தான்

டிசம்பா் 19 ஜப்பான்

நேரடி ஒளிபரப்பு: டிடி ஸ்போா்ட்ஸ்

(இந்த ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது)

இதுவரை...

ஆண்டு இடம் சாம்பியன்

2011 சீனா இந்தியா

2012 கத்தாா் பாகிஸ்தான்

2013 ஜப்பான் பாகிஸ்தான்

2016 மலேசியா இந்தியா

2018 ஓமன் இந்தியா & பாகிஸ்தான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com