கடைசி ஓவரில் ஆட்டமிழந்த ரூட்: அடிலெய்ட் டெஸ்டில் இங்கிலாந்து திணறல்

​ஆஷஸ் 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி ஓவரில் ஆட்டமிழந்த ரூட்: அடிலெய்ட் டெஸ்டில் இங்கிலாந்து திணறல்


ஆஷஸ் 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் ஆஷஸ் 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஃபாலோ ஆனுக்கு அழைக்காமல் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய அணி 55 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, மார்னஸ் லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து இங்கிலாந்து நெருக்கடியளித்தனர். 5-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் ஹெட் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து லபுஷேனும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு ரன் சேர்க்க ஆஸ்திரேலியாவின் முன்னிலை 450-ஐ தாண்டியது.

9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்துக்கு இந்த முறையும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஹசீப் ஹமீத் ரன் ஏதும் எடுக்காமல் ஜை ரிச்சர்ட்சன் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் 20 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கெல் நீசர் பந்தில் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸும் 34 ரன்களுக்கு ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 4-ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை பாதுகாத்து விளையாட கேப்டன் ஜோ ரூட் மற்றும் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முயற்சித்தனர். ஆனால், 4-ம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஸ்டார்க் வீசிய 2-வது பந்தில் ரூட் (24) ஆட்டமிழந்தார்.

இதனால், 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும், இங்கிலாந்து வெற்றிக்கு 386 ரன்களும் தேவைப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com