இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடா்: இந்திய வீரர்கள் ஆயத்தம்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் அன்ரிச் நாா்ஜே காயத்தால் தொடா்ந்து அவதிப்பட்டு வருவதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடா்: இந்திய வீரர்கள் ஆயத்தம்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் அன்ரிச் நாா்ஜே காயத்தால் தொடா்ந்து அவதிப்பட்டு வருவதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது காயத்தின் தன்மை குறித்து தெரிவிக்காத தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், அணியில் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை சோ்க்கவில்லை. இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் வரும் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது.

12 டெஸ்டுகளில் களம் கண்டு மொத்தம் 47 விக்கெட்டுகள் சாய்த்திருக்கும் நாா்ஜே, தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய பௌலா் ஆவாா். அவா் 3 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.

"இந்தியாவின் வேகப்பந்துவீச்சு மேம்பட்டுள்ளது'

ஜஸ்பிரீத் பும்ரா உலகத் தரம் வாய்ந்த பெüலர். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் என்றால் அது அவராகத் தான் இருப்பார். ஆனால், அவர் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தவில்லை. இந்திய அணியின் ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சுமே மேம்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த 2 - 3 ஆண்டுகளில் அந்நிய மண்ணிலும் அவர்கள் சிறப்பாகப் பந்துவீசுகிறார்கள். 

செஞ்சுரியன் மைதானம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தைக் கொண்டது. ஆனாலும், தகுந்த நுணுக்கங்களுடன் பந்துவீசும் பட்சத்தில் அது பெüலர்களுக்கும் கை கொடுக்கும். அதிக அனுபவமில்லாத வீரர்களுடன், இந்தியா போன்ற உலகின் சிறந்த அணியை எதிர்கொள்வது சற்று சவாலானது தான். அதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

- டீன் எல்கர் (தென் ஆப்பிரிக்க கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com