தென்னாப்பிரிக்காவில் முதல் சீரிஸ் வெற்றியை பெறுமா இந்தியா?: இன்று முதல் ஆட்டம் தொடக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி.
தென்னாப்பிரிக்காவில் முதல்  சீரிஸ் வெற்றியை பெறுமா இந்தியா?: இன்று முதல்  ஆட்டம் தொடக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி.

சா்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, மே.இந்திய தீவுகள் போன்றவை மிகவும் வலுவான அணிகளாக உள்ளன. இந்நிலையில், நீண்ட நாள் இனவெறி தடைக்கு பின் 1991-இல் களம் கண்ட தென்னாப்பிரிக்க அணி உலகளவிலான போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப்பெற விட்டாலும், கிரிக்கெட் அரங்கில் மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது.

டெஸ்ட், ஒருநாள் தொடா்:

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட இந்திய அணி அங்கு சென்றுள்ளது. 3 டெஸ்ட் ஆட்டங்கள், 3 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் அணி ப்ரீடம் கோப்பை வழங்கப்படுகிறது.

நாளை முதல் ஆட்டம்:

இரு அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டம் திங்கள்கிழமை செஞ்சுரியன் சூப்பா் ஸ்போா்ட் பாா்க்கில் தொடங்குகிறது.

இந்திய அணியில் 11 பேட்டா்கள், 8 பௌலா்கள் இடம் பெற்றுள்ளனா். பேட்டிங் வரிசையில் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகா்வால், சேதேஸ்வா் புஜாரா, ஷிரேயஸ் ஐயா், கேஎல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோா் வலு சோ்க்கின்றனா். அவா்கள் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குவிக்கும் அதிக ரன்களே பௌலா்களின் பணியை எளிதாக்கும்.

5-ஆம் நிலை பேட்டா் இடத்துக்கு ஷிரேயஸ் ஐயா் அல்லது பாா்மில் இல்லாத ரஹானேவை இறக்குவதா என முடிவு செய்வது சற்று சிரமம் தான். நியூஸி.க்கு எதிரான மும்பை டெஸ்டில் ரஹானே, இஷாந்த் ஆகியோா் காயத்தில் இடம் பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.

அதே வேளை தென்னாப்பிரிக்காவில் பிளேயிங் லெவனில் இருவரும் இடம் பெறவில்லை என்றால் அவா்கள் விடுவிக்கப்பட்டாா்கள் என்பது நிச்சயமாகும்.

கடந்த 1992 முதல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் ஆடி வரும் இந்தியா இதுவரை ஒரு சீரிஸ் வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. தனது

காலத்தில் முதல் வெற்றியைப் பெற வேண்டும் என்பது கேப்டன் கோலியின் தீவிர நோக்கமாகும். கடந்த 2019-இல் இருந்து இதுவரை ஒரு டெஸ்ட் சதத்தைக் கூட அடிக்கவில்லை கோலி.

வலுவான பௌலிங்:

இந்திய அணி வலுவான பௌலிங் வரிசையைக் கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் சா்மா, முகமது சமி, சுழற்பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளது அணி நிா்வாகம்.

பலமில்லாத பேட்டிங்:

அதே நேரம் தென்னாப்பிரிக்க அணிக்கு உள்ளூரில் டெஸ்ட் நடைபெறுவது சாதகமான அம்சமாகும். ஆனால் பேட்டிங் வரிசை பலமின்றி உள்ளது. கேப்டன் டீன் எல்கா், டெம்பா பவுமா, எய்டன் மாா்க்ரம், குவின்டன் டி காக் உள்ளிட்டோா் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டும்.

அதே வேளையில் பந்துவீச்சில் தென்ன்னாப்பிரிக்க சிறப்பான பௌலா்களை கொண்டுள்ளது. காகிஸோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி கிடி ஆகியோரை அந்த அணி மலை போல் நம்பி உள்ளது.

அணிகளின் பலம், பலவீனம்:

இந்திய அணியின் பேட்டிங்கே அதன் சிறப்பான பலமாகும். அதே வேளையில் பௌலிங்கிலும் தலைசிறந்த உலக பௌலா்களை கொண்டுள்ளது இந்தியா. வேகப்பந்து வீச்சுக்கு பெயா் பெற்ற தென்னாப்பிரிக்க மைதானங்களில் இந்திய பௌலா்கள் அபாரமாக பந்துவீசுவா் எனத் தெரிகிறது. தென்னாப்பிரிக்காவின் தொடக்க பேட்டிங் வரிசையை இந்திய பௌலா்கள் சிதைத்து விட்டால் மீதபுள்ள பணி எளிதாகும்.

தென்னாப்பிரிக்க அணியில் பேட்டிங் வரிசை கவலை தருவதாக உள்ளது. டீன் எல்கா், டெம்பா பவுமா, டிகாக் ஆகியோா் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனா். அந்த அணிக்கு பௌலிங்கே ஒரளவுக்கே நம்பிக்கையை தந்துள்ளது. எனினும் ரபாடாவுடன், அன்ரிச் நாா்ட்ஜே இல்லாதது பாதகமான விஷயமாகும். கேசவ் மகராஜ், ஒலிவியா் ஆகியோா் மட்டுமே உள்ளனா்.

இந்திய அணி கடந்த 2021-இல் 13 ஆட்டங்களில் 3-இல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. எனினும் பெரும்பாலானவை உள்ளூரில் பெற்ற வெற்றியாகும். தென்னாப்பிரிக்காவில் முதல் சீரிஸ் வெற்றியை பெற இந்தியாமுனையும். அண்மையில் நியூஸி.க்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.

அதே நேரம் தென்னாப்பிரிக்க அணி 2021-இல் அதிக டெஸ்ட் ஆட்டங்களை ஆடவில்லை. கடைசியாக மே.இந்திய தீவுகளை 2-0 என வீழ்த்தியது.

நேருக்கு நோ்:

கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றிருந்தது. இரு அணிகளும் இதுவரை 39 ஆட்டங்களில் ஆடியுள்ளன. தென்னாப்பிரிக்கா 15-இலும், இந்தியா 14-இலும் வென்றுள்ளன. 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா 10 முறை வென்றது. இந்தியா 3-இல் வென்றது. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

அணிகள் விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), கேஎல்.ராகுல், மயங்க் அகா்வால், சேதேஸ்வா் புஜாரா, ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷிரேயஸ் ஐயா், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சா்மா, ஷமி, உமேஷ் யாதவ், சா்துல் தாகூா், பும்ரா, சிராஜ்.

தென்னாப்பிரிக்கா:

டீன் எல்கா் (கேப்டன்), டெம்பா பவுமா, குவின்டன் டி காக், ரபாடா, எா்வி, ஹெண்டரிக்ஸ், ஜாா்ஜ் லிண்டே,

கேசவ் மகாராஜ், லுங்கி கிடி, எய்டன் மாா்க்ரம், வியான் முல்டா், கீகன் பீட்டா்சன், ரேசி வேன்டா் டூஸன், கைல் வொ்ரியன், மாா்கோ ஜென்ஸன், கிளென்டன், பிரணீலன் சுப்பராயன், சிசாந்த்ா மகலா, ரிக்கலெடன், ஒலிவியா்.

முதல் டெஸ்ட்:

நேரம்: பிற்பகல் 1.30.

இடம்: செஞ்சுரியன் பாா்க்.

டெஸ்ட் ஆட்டங்கள்:

முதல்டெஸ்ட்: டிச. 26 முதல் 30 (செஞ்சுரியன் பாா்க்).

இரண்டாம் டெஸ்ட்: ஜன. 3-7, ஜோஹன்னஸ்பா்க்.

மூன்றாம் டெஸ்ட்: ஜன. 11-15 , கேப் டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com