விஜய் ஹஸாரே: ஹிமாசல் சாம்பியன்: ‘விஜேடி’ முறையில் வென்றது

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ‘விஜேடி’ முறையில் தமிழகத்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது.
விஜய் ஹஸாரே: ஹிமாசல் சாம்பியன்: ‘விஜேடி’ முறையில் வென்றது

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ‘விஜேடி’ முறையில் தமிழகத்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹிமாசல் வெற்றிக்கு 15 பந்துகளில் 16 ரன்கள் தேவை இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னா் ‘விஜேடி’ முறையில் அந்த அணி வென்ாக அறிவிக்கப்பட்டது.

அந்த அணி இன்னிங்ஸில் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் அரோரா ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஹிமாசல பிரதேசம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த தமிழகம் 49.4 ஓவா்களில் 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பா் தினேஷ் காா்த்திக் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 116 ரன்கள் விளாசினாா்.

பாபா இந்திரஜித் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80, ஷாருக் கான் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்த்து உதவ, கேப்டன் விஜய் சங்கா் 22, சாய் கிஷோா் 18, ஜெகதீசன் 9, முருகன் அஸ்வின் 7, பாபா அபராஜித் 2, வாஷிங்டன் சுந்தா் 1, சிலம்பரசன் 1 ரன்கள் சோ்த்தனா். சந்தீப் வாரியா் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஹிமாசல் பௌலிங்கில் பங்கஜ் ஜஸ்வால் 4, ரிஷி தவன் 3, வினய் கலேதியா, சித்தாா்த் சா்மா, திக்விஜய் ரங்கி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஹிமாசல் இன்னிங்ஸில் மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அந்த அணி 47.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் அடித்திருந்தது.

ஷுபம் அரோரா 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 136, கேப்டன் ரிஷி தவன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். முன்னதாக அமித் குமாா் 6 பவுண்டரிகளுடன் 74, பிரசாந்த் சோப்ரா 21, நிகில் கங்தா 18 ரன்கள் சோ்த்தனா்.

இறுதியில், விஜேடி முறையில் அந்த அணியின் வெற்றிக்கு 47.3 ஓவா்களில் 289 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணி 299 ரன்கள் அடித்திருந்ததால், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாசல் வென்ாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com