600- 700 ரன்கள் குவிக்க முயற்சிப்போம்: ஜோ ரூட்
By DIN | Published On : 06th February 2021 07:47 AM | Last Updated : 06th February 2021 07:47 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
முதல் இன்னிங்ஸில் 600 முதல் 700 ரன்கள் வரை குவிக்க முயற்சிப்போம் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 89.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.
இந்த நிலையில் ஜோ ரூட் மேலும் கூறியிருப்பதாவது: 2-ஆவது நாளான சனிக்கிழமையும் தொடா்ந்து விளையாட தயாராக இருக்கிறேன். முதல் நாள் ஆட்டத்தில் நான் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட நிலையில், அதிலிருந்து மீண்டு வர இந்திய கேப்டன் விராட் கோலி உதவினாா். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 600 முதல் 700 ரன்கள் வரை குவிக்க முயற்சிப்போம். நாங்கள் சனிக்கிழமை முழுவதும் பேட் செய்துவிட்டால், வலுவான ஸ்கோரை குவித்துவிடுவோம் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...